2021 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2021 நவம்பர் மாத பொது பலன்கள். சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு நவம்பர் 16, 2021 அன்று பெயருகிறார்.
செவ்வாய் இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சஞ்சரிப்பார். புதன் துலாம் ராசிக்கு நவம்பர் 2, 2021 அன்று பெயருகிறார். பின்னர் நவம்பர் 21, 2021 அன்று விருச்சிக ராசிக்குப் பெயருகிறார். சுக்கிரன் டிசம்பர் 2021 வாக்கில் வக்கிர கதி அடைவதற்காக தன்னுடைய வேகத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். இதனால், சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் தனுசு ராசியில் மெதுவாக நகருவார். ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்

சனி பகவான் மகர ராசியில் முன்னோக்கி பெயர்ந்துவார். மேலும் தனது வேகத்தையும் அதிகரிப்பார். இந்த மாதம் சனி பகவானின் தாக்கங்கள் கோசார கிரகங்களின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும். குரு மகர ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்து கும்ப ராசிக்கு நவம்பர் 19, 2021 அன்று எப்யருகிறார்.
நவம்பர் 19, 2021 ஒரு மிகவும் முக்கியமான நாளாகும், ஏனென்றால், சனி பகவானும், குரு பகவானும் இணைந்து சஞ்சரித்து காலம், தற்போது முற்றிலும் முடிவடைகின்றது. மேலும் இந்த இணைந்த சஞ்சாரத்டோடு அமெரிக்க கூட்டாட்சி ரிசர்வ் எளிதான பணவியல் கொள்கை தொடங்கியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நவம்பர் 19, 2021 அன்று குரு கும்ப ராசிக்கு பெயரும் இந்த பெயர்ச்சியின் தாக்கங்கள் மிகவும் மோசமாக இருக்கலாம். நவம்பர் 29, 2021 முதல் இந்த பெயர்ச்சியின் பலன்களை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த குரு பெயர்ச்சி ஏப்ரல் 14, 2022 வரை மட்டுமே இருக்கும், அதனோடு இந்த சுழற்சி முடிவடைகிறது.
இனி அடுத்த பத்தாண்டு காலத்திற்கு ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான குரு பெயர்ச்சி நடக்கத் தொடங்கும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.