![]() | 2021 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
செப்டம்பர் 2021 கும்ப ராசிப் பலன்கள்
இந்த மாதம் முழுவதும் சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. செவ்வாய் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து சில தடைகளையும் அதிக சவால்களையும் உங்களுக்கு உண்டாக்குவார். புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து சற்று நிவாரணத்தை தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்லப் பலனைத் தருவார்.
ராகு மற்றும் கேதுவிடம் இருந்து இந்த மாதம் உங்களால் நல்லப் பலனை எதிர்பார்க்க முடியாது. உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவான் உங்களுக்கு நல்லப் பலனைத் தருவார். ஆனால் குரு அடுத்த 6 மாதங்களுக்கு நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கக் கூடும் என்பதால், உங்களால் நல்லப் பலனை எதிர்பார்க்க முடியாது.
குறிப்பு: அக்டோபர் 2021 முதல் சனி பகவான் அதிக தடைகளை உண்டாக்குவார். ஏப்ரல் 2022 வரை குருவும் நல்ல நிலையில் சஞ்சரிக்க மாட்டார். வரும் நாட்களில் நீங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் எண்டால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகப் பலனைப் பார்க்க வேண்டும்.
Prev Topic
Next Topic



















