![]() | 2021 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
செப்டம்பர் 2021 மிதுன ராசிப் பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார். உச்சம் பெற்ற புதன் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பல மடங்கு அதிகரிப்பார். ஆனால் செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சில சிறிய பின்னடைவுகளை உண்டாக்க நேரலாம்.
கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகரிப்பார். ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் தூக்கத்தை சற்று பாதிக்கக் கூடும். உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவானும் சிறப்பானப் பலனைத் தர உள்ளார். வக்கிர கதி அடைந்த குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் இருந்து 8ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும்.
நல்ல அதிர்ஷ்டங்களும், வெற்றியும், வளர்ச்சியும் கொண்டு ஒரு சிறந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து விரைவாக நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்கலாம். செப்டம்பர் 15, 2021 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.
எச்சரிக்கை: அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 ஆகிய அடுத்த இரண்டு மாதங்களுக்கு உங்கள் அதிர்ஷ்டம் மிக மோசமாக பாதிக்கப்படலாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத மோசமான சம்பவங்களை சந்திக்க நேரலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் உங்களுக்கு அதிக மன உளைச்சலும் ஏற்படலாம். நீங்கள் மீண்டும் டிசம்பர் 2021 வாக்கில் உங்கள் பலத்தைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic



















