![]() | 2021 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
செப்டம்பர் 2021 சிம்ம ராசிப் பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படலாம். சுக்கிரன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்வதால் உங்கள் பதற்றம் குறையும். புதன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது.
ராகு மற்றும் கேதுவிடம் இருந்து இந்த மாதம் எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவான் உங்கள் வளர்ச்சியை பாதிக்கலாம். உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த குரு உங்களுக்கு சில உதவிகளை செய்வார். எந்த முன்னேற்றமும் இல்லாமல் விடயங்கள் தேக்கம் அடைய நேரலாம்.
எந்த பெரிய வளர்ச்சியும் இல்லாமல் இந்த மாதம் ஒரு மந்தமான மாதமாக இருக்கலாம். எந்த பெரிய முன்னேற்றமும் இல்லாமல் நீங்கள் ஒரே நிலையில் தேக்கம் அடையலாம். ஆனால், பிரச்சனைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எனவே, நீங்கள் பயப்பட எதுவும் இல்லை. நீங்கள் நவம்பர் 20, 2021 வரை காத்திருந்தால், அதன் பிறகு உங்கள் நீங்கள் பெரிய அளவு அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள், உங்கள் வாழ்க்கைப் பயணமும் சுமூகமாக இருக்கும்.
Prev Topic
Next Topic



















