![]() | 2021 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
செப்டம்பர் 2021 தனுசு ராசிப் பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து செப்டம்பர் 16, 2021 முதல் உங்களுக்கு நல்லப் பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் செப்டம்பர் 6 முதல் சஞ்சரித்து உங்களுக்கு நல்லப் பலனைத் தருவார், ஆனால் பதற்றம் அதிகமாக இருக்கலாம்., புதன் சிறப்பான நிலையில் சஞ்சரித்து உச்சம் பெற்ற நிலையில் உங்களுக்கு விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து செப்டம்பர் 7, 2021 முதல் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்.
ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தருவார். கேது உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து நீங்கள் தானம் தர்மங்கள செய்வதில் சற்று நேரத்தை செலவிடச் செய்வார். உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவான் இந்த மாதம் உங்களுக்கு நல்ல நிதி லாபத்தை தருவார். குரு இந்த மாதம் சாதகமான நிலையில் சஞ்சரிக்கவில்லை.
மொத்தத்தில், இந்த மாதத்தின் இரண்டு வாரங்கள் சிறப்பாக இல்லை, ஆனால் செப்டம்பர் 16, 2021 முதல் விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நகரத் தொடங்கும். அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 வாக்கில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.
Prev Topic
Next Topic



















