![]() | 2022 August ஆகஸ்ட் மாத தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
நீண்ட சோதனை காலத்திற்கு பிறகு, விடயங்கள் இந்த மாதம் பெரும் அளவு முன்னேற்றத்தைப் பெரும். நீங்கள் உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் அலுவலகத்தை வேறு புதிய இடத்திற்கு மாற்ற இது நல்ல நேரம். உங்கள் வணிகத்தை விற்றுவிட உங்களுக்கு திட்டம் இருந்தால் அதனை அடுத்த சில வாரங்களில் நீங்கள் செய்யலாம். அக்டோபர் 18, 2022 க்கு முன் நீங்கள் இதனை செய்துவிட முயற்சி செய்யுங்கள்.
பண வரத்து உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் வரும். உங்கள் வங்கிக் கடன்கள் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். மேலும் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்தும் உங்களுக்கு நிதிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் மற்றும் சுய தொழில் புரிவோர்களுக்கு இது நல்ல வெகுமதிகள் கிடைக்ககூடிய காலமாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.
எச்சரிக்கை: அக்டோபர் 18, 2022 முதல் ஜனவரி 18, 202௩ வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். எனவே அக்டோபர் 18, 2022 க்கு முன்னரே நீங்கள் உங்கள் சொந்த மற்றும் வணிகம் சார்ந்த சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ளவும் ரிஸ்க் எடுப்பதை குறைத்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic



















