![]() | 2022 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஆகஸ்ட் 2022 விருச்சிக ராசி பலன்கள் (Scorpio Moon Sign). சூரியன் உங்கள் ராசியின் 9 மற்றும் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு ஆகஸ்ட் 15, 2022 க்கு பிறகு நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவுகளில் நல்ல முன்னேற்றத்தை தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டில் ஆகஸ்ட் 11, 2022 அன்று சஞ்சரித்து உங்களுக்குக்கு இருக்கும் பதற்றத்தை அதிகரிப்பார். புதன் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
ராகு உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை அகற்றுவார். கேது உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிறருக்கு உதவு உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் ஒரு பலவீனமான விடயம் என்னவென்றால், சனி பகவான் மற்றும் குரு இந்த மாதம் பின்னோக்கி பெயர்ச்சி ஆவது தான்.
விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். ஆனால் உங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைப்பதில் இருக்கும் போட்டி மற்றும் இறுதி நிலையைத் தெரிந்து கொள்ள இந்த மாதம் வாய்புகள் குறைவே. அடுத்த சில மாதங்களுக்கு நீங்கள் மேலும் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். ஆனால் இந்த மாதம் நீங்கள் புதிதாக எதையும் தொடங்க ஏற்ற மாதமாக இல்லை.
அக்டோபர் 25, 2022 க்கு பிறகு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும் சுமூகமான ஒரு பயணத்தையும் காண்பீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் விஷ்ணு சஹாசார நாமம் கேட்டு தடைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic



















