2022 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2022 பெப்ரவரி மாதப் பொது பலன்கள். சூரியன் பெப்ரவரி 13, 2022 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
செவ்வாய் பெப்ரவரி 26, 2022 வரை தனுசு ராசியில் சஞ்சரித்து பின்னர் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வக்கிர கதி அடைந்த புதன் பெப்ரவரி 4, 2022 அன்று மகர ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்து இந்த மாதம் முழுவதும் மகர ராசியில் சஞ்சரிப்பார்.
கடந்த ஜனவரி 29, 2022 அன்று சுக்கிரன் தனுசு ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்த நிலையில், பெப்ரவரி 28, 2022 வரை சுக்கிரன் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதம் முழுவதும் சனி பகவான் மகர ராசியில் சஞ்சரிப்பார், ஆனால் பெப்ரவரி 17, 2022 அன்று அவிட்ட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவார். குரு கும்ப ராசியில் சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த மாதம் 5 கிரகங்கள் ஒன்றாக இணைந்து மகர ராசியில் சஞ்சரிக்கிறார்கள். ஐந்து கிரகங்களான சந்சிரன், சுக்கிரன், செவ்வாய், புதன் மற்றும் சனி பகவான் ஆகியோர் இணைந்த இந்த சஞ்சாரம் கால சர்ப்ப யோகத்தில் நிகழ்கிறது. இது அனைத்து கிரகங்களும் ராகு/கேது அச்சின் ஒரு பக்கத்தில் நிலை கொள்வதை காட்டுகிறது.
பெப்ரவரி 25, 2022 முதல் மார்ச் 1௦, 2022 வரையிலான காலகட்டத்தில் பல நிகழ்வுகள் நடக்கலாம். உங்கள் ஜென்ம ராசிக்கு ஏற்றவாறு பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.