![]() | 2022 February பிப்ரவரி மாத காதல் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | காதல் |
காதல்
செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் காதல் வாழ்க்கைக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். பெப்ரவரி 17, 2022 வாக்கில் நீங்கள் காதலிக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். உங்கள் காதல் திருமணத்தை நோக்கி முன்னேறுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தைப் பேறு பெரும் பாக்கியம் சிறப்பாக உள்ளது. உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் கனவு சுற்றுலாவிற்குச் செயல்ல திட்டமிட இது சிறப்பான நேரம். உங்களது நீண்ட கால கனவுகளும் ஆசைகளும் நினவாகும்.
மொத்தத்தில் கோச்சார கிரகங்களின் நிலைப்படி, இது போன்ற ஒரு சிறப்பான மாதத்தை உங்களால் பார்க்க முடியாது. உங்களால் நேர்மறை மாற்றங்களை காண முடியவில்லை என்றால், என்ன பிரச்சனை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை பார்க்க வேண்டும். நல்ல மாற்றங்களைப் பெற நீங்கள் உங்கள சோதிடரை அணுகி ஆலோசனைப் பெற முயற்சிக்கலாம்.
சிறப்பு குறிப்பு: ஏப்ரல் 15, 2022 வரை உள்ள நேரத்தை நீங்கள் தவறவிட்டால் அதன் பிறகு மே 2023 க்கு பிறகு தான் நீங்கள் திருமண முயற்சிகளை எடுக்க முடியும்.
Prev Topic
Next Topic



















