![]() | 2022 January ஜனவரி மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
கடந்த மாதம் நீங்கள் கலவையானப் பலன்களை கண்டிருப்பீர்கள். செவ்வாய் மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் ஜனவரி 15, 2022 க்கு மேல் நீங்கள் அதனை சரி செய்து விடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் ஜனவரி 15, 2022 க்கு மேல் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது சிறப்பான நேரமாக உள்ளது. உங்கள் வீட்டில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். ஜனவரி 26, 2022 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.
Prev Topic
Next Topic



















