2022 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2022 ஜனவரி மாத பொதுப் பலன்கள் , சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஜனவரி 14, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு ஜனவரி 16, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார்.
புதன் மகர ராசியில் ஜனவரி 14, 2022 அன்று வக்கிர கதி அடைகிறார். சுக்கிரன் டிசம்பர் 19, 2022 அன்று வக்கிரகதி சுழற்சியை தொடங்கி இப்போது ஜனவரி 29, 2022 அன்று தனுசு ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
சனி பகவான் 2௦ பாகையை (அதாவது 2/3) மகர ராசியில் இந்த மாதம் கடக்கிறார். குரு சதய நட்சத்திரத்தில் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.
சுக்கிரன் மற்றும் புதன் வக்கிரகதி அடைந்த நிலையில் சஞ்சரிப்பது தான் இந்த மாதம் குறிப்பிடத்தக்க நிகழ்வாக உள்ளது. செவ்வாய் மற்றும் சுக்கிரன் நெருக்கமாக பயணித்து உறவுகள் சார்ந்த விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். விரைவாக நகரும் கிரகங்களின் தாக்கங்கள் இந்த மாதம் அதிகமாகவே உணரப்படும்.





Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.