![]() | 2022 July ஜூலை மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயர்ச்சி ஆவதால் உங்கள் அலுவலகத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். மாலை நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் கூட வேலை பார்ப்பீர்கள். உங்கள் உடல்நலம் இதனால் பாதிக்கப்படலாம். சனி பகவான் மற்றும் குருவின் பலத்தால் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வீர்கள். ஆனால் உங்களால் பெரிதாக பதவி உயர்வு போன்ற எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது.
கடுமையான வாக்குவாதங்களால் உங்கள் உத்தியோக வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படலாம். புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் சில நல்ல மாற்றங்களை காண்பீர்கள். அப்படி இல்லை என்றால், நீங்கள் நல்லப் பலனைப் பெற நீண்ட காலம் ஆகலாம்.
Prev Topic
Next Topic



















