![]() | 2022 July ஜூலை மாத உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | உடல்நலம் |
உடல்நலம்
இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் பதற்றம் மற்றும் மனக் கவலை அதிகமாக இருக்கும். ஆனால் செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான உதவிகளை செய்வார்கள். சனி பகவான் மகர ராசிக்கு ஜூலை 14, 2022 அன்று மீண்டும் பெயர்ச்சி ஆவதால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவீர்கள். நீங்கள் நல்ல உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோகியத்தை நல்ல நிலையில் வைத்திருப்பீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும்.
ஜூலை 14, 2022 க்கு பிறகு நீங்கள் அறுவைசிகிச்சை செய்துகொள்ள திட்டமிடலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். மூச்சு பயிற்சி செய்து உங்கள் சக்தியின் அளவை விரைவாக அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic



















