2022 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் | |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2022 ஜூலை மாத பொது பலன்கள். ஜூலை 16, 2022 அன்று சூரியன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்சி ஆகிறார்
செவ்வாய் இந்த மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ஜூலை 1௩, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார்.
புதன் இந்த மாதம் மிதுன ராசி மற்றும் கடக ராசியில் நேரத்தை செலவிடுவார். சனி பகவான் ஜூலை 14, 2022 அன்று வக்கிர கதி அடைந்து கும்ப ராசியில் இருந்து மீண்டும் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இது இந்த மாதத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். ஜூலை 29, 2022 அன்று குரு வக்கிர கதி அடைகிறார், இது இந்த மாதத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக இருக்கும். கடந்த மாதத்தில் இருந்து ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் எந்த மாற்றமும் இல்லாமல் சஞ்சரிக்கின்றார்கள்.
செவ்வாய் மற்றும் ராகு இணைந்து சஞ்சரிப்பதால் சில பாதகமான பலன்கள் ஏற்படலாம். இதனால் மக்களை பாதிக்கும் வகையில் சில திடீர் அரசு கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். ஜூலை 2022 க்கான உங்களது பலன்களை பார்க்க உங்கள் ராசியை கிளிக் செய்யுங்கள்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.