2022 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2022 மார்ச் மாதப் பலன்கள். சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மார்ச் 15, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். செவ்வாய் மகர ராசியில் உச்சம் பெற்ற நிலையிலேயே இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்.
சுக்கிரன் வேகம் பெற்று இந்த மாதம் இயல்பான நிலைக்குத் திரும்புவார். இதன் பிறகு மகர ராசியில் இந்த மாதம் முழுவதும் செவ்வாய் மற்றும் சனி பகவானுடன் இணைந்து சஞ்சரிப்பார்.
புதன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மார்ச் 6, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். அதன் பிறகு மார்ச் 24, 2022 அன்று மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
சனி பகவான் இந்த மாதம் முழுவதும் அவிட்டம் நட்சத்திரத்தில் மகர ராசியில் சஞ்சரிப்பார். குரு ஷதபிஷா [சதயம்] நட்சத்திரத்தில் இருந்து பூர்வ பத்ரபதா [பூரட்டாதி] நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி கும்ப ராசியில் சஞ்சரிப்பார்.
சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன் மற்றும் சனி பகவான் பெப்ரவரி 28, 2022 அன்று இணைந்து, மார்ச் 1, 2022 வரை தொடர்ந்து சஞ்சரிப்பார்கள். மேலும் இந்த இணைந்த சஞ்சாரம் கல சர்ப்ப யோகத்தில் நடக்கின்றது. இது அனைத்து கிரகங்களும் ராகு / கேது அச்சின் ஒரே பக்கத்தில் நிலைப் பெறுவதை உணர்த்துகிறது. இந்த இணைந்த சஞ்சாரம் எந்த பாதிப்பையும் ஒரே இரவில் ஏற்படுத்திவிடாது. ஆனால் அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக சில முக்கிய மாற்றங்களை நிகழ்த்தலாம். இந்த இணைந்த சஞ்சாரம் கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்திற்கு ஒரு முடிவை கொண்டு வரலாம்.
உங்கள் ராசியை கிளிக் செய்து மார்ச் 2022 க்கான உங்கள் ராசிப் பலன்களைப் பாருங்கள்.




Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.