![]() | 2022 March மார்ச் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
குரு உங்கள் ராசியின் ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து அலுவலகத்தில் உங்களுக்கு எதிரான அரசியல் மற்றும் சதியை ஏற்படுத்துவார். உங்கள் வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். செவ்வாய் மற்றும் சனி பகவான் இணைந்து உங்களுக்கு ஏற்படக்கூடிய அதிர்ஷ்டங்களை குறைப்பார்கள். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும், உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. மாறாக, ப்ராஜெக்ட் தோல்வியடைந்ததற்கு நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள்.
நீங்கள் கடுமையாக உழைத்தாலும் உங்கள் மேலாளரை உங்களால் மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாது. உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு அடுத்த 7 வாரங்களுக்கு உங்கள் வாழ்வாதாரத்திற்காக நீங்கள் உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். புதிய வேலை வாய்ப்புக்கு நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தாள், நேர்காணலில் உங்களால் தேர்ச்சி பெற முடியாமல் போகலாம். அத்தகைய தோல்வி உங்கள் மன நிம்மதியை பாதித்து உங்கள் தன்னம்பிக்கையையும் இழக்க செய்துவிடும்.
அவமானங்கள், இன்னல்கள், ஏற்றத் தாழ்வுகள் போன்ற விடயங்களும் உங்கள் அலுவலகத்தில் ஏற்படலாம். நீங்கள் ஏதாவது புகார் கூற நினைத்தால், ஏப்ரல் 15, 2022 வரை காத்திருக்கவும். அப்படி இல்லை என்றால், விடயங்கள் உங்களுக்கு எதிராக திரும்பி விடலாம், மேலும் மோசமாகவும் செய்யலாம். மேலும் மோசமான சூழலில் மார்ச் 16, 2022 முதல் மார்ச் 28, 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic



















