![]() | 2022 October அக்டோபர் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
உங்கள் உத்தியோகத்தில் எந்த முன்னேற்றத்தையும் நீங்கள் இப்போது பார்க்க முடியாது. நீங்கள் பல ஏமாற்றங்களை சந்திக்க நேரலாம். உங்களுக்கு உத்தியோகத்தில் இருக்கும் அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பாரிக்கும் சக ஊழியர்களுடன் உங்களுக்கு கருத்துவேருப்படுகள் ஏற்படலாம். சனி பகவான் அக்டோபர் 23, 2022 க்கு பிறகு வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்களுடன் வேலைப் பார்ப்பவர்களுடன் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கபப்டலாம். அக்டோபர் 27, 2022 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்காமல் போவதால் நீங்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் போன்ற பலன்கள் மேலும் அடுத்த சில மாதங்களுக்கு தாமதமாகலாம்.
நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் உங்களால் எந்த நல்ல பலனையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்றால், அது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லாமல் போகலாம். அடுத்த 7 வாரங்களுக்கு பிறகு விடயங்கள் சிறப்பாக நடக்கத் தொடங்கும்.
Prev Topic
Next Topic



















