2022 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2022 அக்டோபர் மாத பொது பலன்கள். சூரியன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு அக்டோபர் 17, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார்.
செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு அக்டோபர் 16, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3௦, 2022 அன்று செவ்வாய் வக்கிர கதி ஆவது இந்த மாதத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது. இதனால் பொருளாதார வளர்ச்சியில் ஒரு தாக்கம் ஏற்படுவதோடு ரியல் எஸ்டேட் விலைகளும் பாதிக்கப்படும்.
சுக்கிரன் கன்னி ராசியில் அக்டோபர் 18, 2022 வரை பலவீனமான இடத்தில் சஞ்சரிகின்றார். அதன் பிறகு முழு பலம் பெற்று துலாம் ராசியான தன்னுடைய சொந்த வீட்டிற்கே பெயர்ச்சி ஆகிறார்.
புதன் கன்னி ராசியில் அக்டோபர் 2022 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து பின்னர் துலாம் ராசிக்கு அக்டோபர் 25, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார்.
இந்த மாதம் முழுவதும் ராகி மேஷ ராசியில் சஞ்சரிப்பார். கேது சூரியன், புதன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பார். சனி பகவான் அக்டோபர் 23, 2022 அன்று மூன்றாம் முறையாக மகர ராசியில் வக்கிர நிவர்த்தி ஆகிறார். இதனால் அக்டோபர் 23, 2022 வாக்கில் சனி பகவானின் தாக்கம் அதிகமாக உணரப்படும்.
சனி பகவான் இந்த மாதத்தின் இறுதி வாரம் வாக்கில் கேது, சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களையும் பார்வை இடுகிறார். இதனால் இந்த உலகில் வாழும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சனி பகவான் பல மாற்றங்களை கொண்டு வருவார். இந்த மாதம் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள உங்களுடைய ராசியை கிளிக் செய்யுங்கள்!




Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.