![]() | 2022 September செப்டம்பர் மாத காதல் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | காதல் |
காதல்
இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ராசியின் 5 ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருந்தால், அதற்கு இப்போது நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். குரு வக்கிர கதி அடைவதால், நீங்கள் நவம்பர் 29, 2022 வரை காத்திருந்து அதன் பின்னர் திருமணம் செய்ய முயற்சிக்கலாம்.
திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்காக காத்திருந்த தம்பதியினர் அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். நீங்கள் IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சையைச் செய்து கொண்டிருந்தால் நவம்பர் 18, 2022 வாக்கில் அது சார்ந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic



















