2022 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2022 செப்டம்பர் மாத பொது பலன்கள். சூரியன் செப்டம்பர் 17, 2022 அன்று சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
செவ்வாய் இந்த மாதம் முழுவதும் ரிஷப ராசியில் சஞ்சரிப்பார். செவ்வாய் இந்த மாதம் மெதுவாகவே பெயர்ச்சி ஆகி, அடுத்த மாதம் (அக்டோபர் 3௦, 2022) வக்கிர கதி அடைவார்.
செப்டம்பர் 25, 2022 வரை சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார்.புதன் உச்சம் பெற்ற நிலையில் கன்னி ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார், இருந்தாலும், செப்டம்பர் 9, 2022 அன்று வக்கிர கதி அடைவார்.
ராகு நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது தனியாக இயங்குவதால், அனைவரது வாழ்க்கையிலும் நல்ல ஒரு தெளிவும் திடத்தன்மையும் ஏற்படும். கேது துலாம் ராசியில் சஞ்சரிப்பார். சனி பகவான் மற்றும் குரு இந்த மாதம் வக்கிர கதி அடைந்த நிலையில் இருப்பார்கள். புதன் செப்டம்பர் 9, 2022 அன்று வக்கிர கதி அடைவதே ஒரு மிகப் பெரிய நிகழ்வாக இந்த மாதம் இருக்கும். புதன் அதிகப்படியான தாமதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவார்.
புதன் உச்சம் பெற்ற நிலையில் வக்கிர கதி அடைவதால், இதன் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். உங்களது இந்த மாத ராசிப் பலனை பார்க்க உங்கள் ராசியின் மீது கிளிக் செய்யுங்கள்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.