![]() | 2018 புத்தாண்டு தொழில் மற்றும் வேற்று வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | தொழில் மற்றும் வேற்று வருமானம் |
தொழில் மற்றும் வேற்று வருமானம்
கடந்த 2017ஆம் வருடம் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு மோசமான வருடமாக இருந்திருக்கும். உங்கள் வருமானம் பூஜியத்தை தொட்டிருந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும் இந்த 2018ஆம் வருடத்தின் தொடக்கத்தில் நீங்கள் தொழிலை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு பல நல்ல செய்திகள் வரும். இந்த வருடத்தின் தொடக்கம் சிறப்பாக உள்ளது. அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலைபாட்டில் உள்ளனர். அதனால் அணைத்து மோசமான சூழலில் இருந்தும் நீங்கள் வெளி வருவீர்கள்.
நீங்கள் பல நல்ல முயற்சிகளும் யோசனைகளும் கொண்டு உங்களது தொழிலில் முன்னேறுவீர்கள். உங்களது புது யோசனையால் நீங்க சந்தையில் ஒரு இடம் பிடிக்கலாம். உங்களுக்கு மேலும் புது ப்ரொஜெக்ட்டுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது உங்களது தொழில் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையாக இருந்து உங்களை முன்னேற்றிவிடும்.
உங்களுக்கு வருமானம் மற்றும் நிதி பல வழிகளில் வர உள்ளது. வெளி நாட்டில் இருந்தும் உங்களுக்கு பண வரவு கிடைக்கும். உங்களுக்கு புது முதலீட்டாளர்களிடம் இருந்து தேவையான நிதி உதவி கிடைக்கும். மேலும் எதிர் பார்த்த படி வங்கி கடனும் கிடைக்கும். புது முயற்சியில் ஈடுபட இது ஏற்ற காலகட்டமாகும். நீங்கள் புதிதாக தொழில் தொடங்க முயற்சிக்கின்றீர்கள் என்றால் அதற்க்கு இது தக்க காலமாகும். சுய தொழில் புரிவோர், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிஷன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளுக்கு இது ஓர் பொற்காலமாகும்.
Prev Topic
Next Topic