2018 புத்தாண்டு நிதி/ பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

நிதி/ பணம்


2017ல் குரு, சனி மற்றும் ராகு கேது உங்களது நிதி நிலையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையிலேயே கடந்த ஆண்டு மிகவும் மோசமாதாக இருந்திருக்கும்.
இந்த 2018ஆம் வருடம் குரு, சனி, மற்றும் ராகு உங்களது ராசிக்கு நல்ல இடத்தில் சஞ்சாரம் செய்கின்றனர். இந்த நல்ல நிலை உங்களது அணைத்து கடன்களையும் விரைந்து நீங்கள் அடைக்க உதவும். மேலும் நீங்கள் ஏதேனும் தொழில் நிமித்தமாக அல்லது வேறு செலவுகளுக்காக வங்கியில் கடன் வேண்டினாள் அது எளிதாக கிடைக்கும்.


உங்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் வரும். உங்களது வருமானமும் புது வேலையால் அல்லது பதவி உயர்வால் அதிகரிக்கும். தேவை அற்ற செலவுகள் குறையும். உங்களது கடன்களை நீங்கள் விரைவாக அடைப்பீர்கள். மேலும் இதனை நாட்கள் உங்களுக்கு இருந்த நிதி பிரச்சனைகள் தற்போது படிப் படியாக குறையும்.
உங்களது கடன் மதிப்பு உயரும். மேலும் புது கடன் கிடைப்பதற்கு உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகும். உங்களுடைய சேமிப்பு அதிகமாகும். இது உங்களை மகிழ்விக்கும். மேலும் நீங்கள் வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் 2018 வரை வீடு அல்லது மனை வாங்க முயற்சிக்கலாம். உங்களது முயற்சி கை கூடி வரும்.




Prev Topic

Next Topic