![]() | 2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 11, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரை - - குடும்பத்தில் மகிழ்ச்சி (75 / 100)
குரு பகவான் வரும் அக்டோபர் 11, 2018 அன்று உங்கள் ராசியின் 10ஆம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். இந்த சாதகமான கிரகங்களின் சஞ்சாரத்தால் உங்களுக்கு தொடர்ந்து வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்த சூழல் நிலவும். உங்களது வளர்ச்சி தொடர்ந்து நடைபெறும். அதனை எந்த காரனதிர்க்காகவும் நிறுத்த முடியாது. மேலும் சனி பகவான் உங்களுக்கு பல நல்ல பலன்களை தர உள்ளார். இந்த நான்காம் பாக காலகட்டத்தில் உங்களுக்கு அதிக வேலை சுமையும் செலவுகளும் இருக்கும். எனினும் எந்த ஒரு பிரச்சனையோ சிக்கலோ இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையிலும் குடும்பத்திலும் இருக்காது.
உல்லாச பயணம் செல்வதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். பல புதிய இடங்களுக்கு செல்வதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு சௌகாரியமான தங்கும் இடம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் முதலீடு உங்களுக்கு வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் இருக்கும். பங்கு சந்தை உங்களுக்கு எதிர் பார்த்த லாபத்தை தரும், எனினும் இந்த காலகட்டத்தில் நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic