2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


கடந்த வருடம் நீங்கள் வர்த்தகத்தில் ஒரு மோசமான நிலையையே சந்தித்து வந்திருப்பீர்கள். பெரும் அளவில் பணத்தை இழந்திருப்பீர்கள். அது உங்களது முதலீட்டை பெரிதாக பாதித்திருந்திருக்கும். மேலும் நீங்கள் நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகத்தில் அதிகம் பணம் இழந்திருப்பீர்கள். இது உங்களுக்கு பெரிய அளவில் பண நட்டத்தை ஏற்படுத்துவதோடு உங்களை பீதியில் ஆழ்த்தியிருக்கும். இந்த 2018ஆம் வருடம் முதலீடு மற்றும் வர்த்தகம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. அனைத்து முக்கிய கிரகங்களும் சிறப்பான நிலையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தர உள்ளனர்.
நீங்கள் வீடு வாங்க முயற்சித்தால் வரும் செப்டம்பர் 2018 மேல் முயற்சிக்கலாம். உங்களது ரியல் எஸ்டேட் முதலீடுகள் அனைத்தும் லாபகரமாக இருக்கும். மேலும் உங்களது மகா தசை பலமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் முயற்சிக்கலாம்.



Prev Topic

Next Topic