2018 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

கல்வி


நீங்கள் கடந்த ஆண்டு பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். உங்களது உறவினர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் சில அவமானங்களையும் சந்தித்திருந்திருப்பீர்கள்.
இந்த ஆண்டு குரு பகவான் மற்றும் சனி பகவான் சாதகமான நிலையில் உள்ளதால் உங்களுக்கு நல்ல பலத்தை தந்து அணைத்து சூழலையும் தைரியத்தோடு சந்திக்கும் தென்பை தருவார். நீங்கள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். மேலும் நீங்கள் தீய பழக்கத்திற்கு ஆளாகியிருந்தால் அதில் இருந்து தற்போது மீண்டு வருவீர்கள்.


நீங்கள் உங்களது படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டி பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு பல புது நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். மேலும் உங்களது நண்பர்களோடு நெருக்கத்தோடு பழகுவதால் உங்களுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். மேல் படிப்பு அல்லது Ph.D மாணவர்களுக்கு உங்களது ஆய்வறிக்கை ஒப்புதல் பெற அக்டோபர் மாதம் வரை நல்ல காலகட்டமாகும்.


Prev Topic

Next Topic