2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


2017-ம் ஆண்டு அக்டோபர் வரை நீங்கள் மிகவும் இன்னல்களை சந்தித்து இருப்பீர்கள். உங்களது குடும்பத்தில் பல சிக்கல்கள் நிலவி வந்திருக்கும். மேலும் நீங்கள் உங்களது குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீங்கள் உங்களது மனைவி/கணவனிடம் சண்டை போட்டு கடந்த ஆண்டு பிரிந்திருக்கலாம். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் நீங்கள் சில அவமானத்தையும் உங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் சில அவமானத்தை அக்டோபர் 2017 வரை சந்தித்திருந்திருக்க கூடும்.
இந்த ஆண்டு 2018-ல் குரு 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதினால், இத்தனை நாட்களாக நிலவி வந்த சிக்கல்கள் நீங்கி நீங்கள் இப்பொழுது ஒரு நல்ல சூழலை காண்பீர்கள். மேலும் உங்களது மறைமுக எதிரிகள் உங்களை விட்டு. விலகுவார்கள் நீங்கள் உங்களது மனைவி/கணவனோடு அல்லது குடும்பத்தினரோடு மனம் விட்டு பேசுவதால் நிலவி வந்த சிக்கல்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.


இந்த குரு பெயர்ச்சி பல பிரச்சனைகளை தீர்க்கும் என்று நீங்கள் நம்பலாம். குடும்பத்தினர்கள் அனைவரும் ஒன்றிணைவதால் நீங்கள் ஒரு குதூகலமான சூழலை உங்களது குடும்பத்தில் காணலாம். உங்களது குழந்தைகள் உங்களது பேச்சை கேட்பார்கள். மேலும் உங்களது மதிப்பும் உங்கள் குடும்பத்தில் உயரும். உங்களது வீட்டில் சுப காரியங்கள் செய்வதற்கு இது ஒரு தக்க காலமாகும். திருமணம், புது மனை புகு விழா, மாற்று பல சுப காரியங்கள் செய்வதற்கு அக்டோபர் 2018 வரை கிரக அமைப்புகள் சாதகமாக உள்ளன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எந்த சுபா காரியங்களையும் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.



Prev Topic

Next Topic