![]() | 2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 11, 2018 - ஏப்ரல் 29, 2019 வரை சோதனையான காலம் (45 / 100)
அக்டோபர் 11, 2018 முதல் குரு பகவான் விருசிக்க ராசியில் சஞ்சரிக்க உள்ளார். உங்களது மனம் பல சோதனைகளுக்கு உள்ளாகக் கூடும். நீங்கள தேவையற்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். உங்களது மனைவி / கணவன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் உங்களுக்கு இன்னல்களை தரக் கூடும். உங்களது மனைவி / கணவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார். மேலும் அவர் அவரது குடும்பத்தினர்கலுக்கே அதிக முக்கியத்துவம் தருவார். இது கணவன் மனைவிக்கிடையே பல பிரச்சனைகளை உண்டாக்க கூடும். உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் இருவரும் தற்காலிகமாக பிரிய நேரிடும். காதலர்களுக்கு இது ஒரு சோதனையும் சவாலும் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நீங்கள் உங்களது விருப்பத்தை உங்களது குடும்பத்தினரிடம் கூறினால் அது தேவையற்ற குடும்ப பிரச்சனையை உருவாக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு சுப காரியமும் செய்யாதிருப்பது நல்லது. அதனை நீங்கள் சிறிது காலம் தள்ளிப் போடலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கும். தேவை இல்லாத ப்ராஜெக்ட் மாற்றம் அல்லது கம்பெனி மாறவேண்டிய சூழல் எழலாம். இது உங்களது வளர்ச்சியை பெரிதும் பாதிக்க கூடும். மேலும் புதிதாக வேலைக்கு முயற்ச்சிப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் உங்களது வேலையை பாதுகாத்துக் கொள்ள மிக பொறுமையாக இருக்க வேண்டும். மேலும் எந்த ஒரு விடயத்தையும் அல்லது பிரச்சனையையும் குறித்து நீங்கள் உங்களது மேலாலரிடமோ அல்லது உடன் வேலை பார்ப்பவரிடமோ ஆலோசிக்க முயற்ச்சித்தால் அது உங்களுக்கு பாதகமாக போய் முடியும். அதனால் முடிந்த அளவிற்கு பொறுமையாக செயல் படுவது நல்லது.
தொழிலதிபர்களுக்கு சிறிய காரணத்திற்க்காக கூட உங்களது வாடிக்கையாளர்களை நீங்கள் இழக்க நேரலாம். இதனால் உங்களது பண வரத்து அதிகம் பாதிக்க கூடும். உயரும் நிதி பிரச்சனைகளால் உங்களது மனம் அமைதி இழந்து காணப்படும். மேலும் புதிய முதலீடு மற்றும் முயற்சி செய்வதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை.
Prev Topic
Next Topic