![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
குரு பகவான் களத்ர ஸ்தானத்தில் வரும் அக்டோபர் 11, 2018 வரை நல்ல நிலையில் சஞ்சாரம் செய்கின்றார். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் நல்ல செய்தியே ஆகும். கேது செவ்வாய் சேர்க்கை உங்களது கோபத்தை அதிகரித்தாலும், வளர்ச்சியை பாதிக்காது.
இப்பொழுது உங்களது சங்கடங்கள் அனைத்தும் 2018-ல் ஒரு முடிவுக்கு வர போகின்றது. நீங்கள் உங்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை சந்திக்க உள்ளீர்கள். உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். உங்களது உத்தியோகத்திலும் நிதி நிலையிலும் நிலவி வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கி இப்பொழுது நீங்கள் ஒரு நல்ல முன்னேற்றமான பாதையை காண்பீர்கள். உங்களது குடும்பத்தினரோடு நல்ல உறவில் அக்டோபர் மாதம் வரை இருப்பீர்கள்.
2018 ஆம் ஆண்டின் (நவம்பர் மற்றும் டிசம்பர் 2018) மாதங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற மாற்றங்களையும் சவால்களையும் கொண்டு வரலாம். நீங்கள் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை சிறந்த வளர்ச்சியைப் பார்ப்பீர்கள், பின்னர் ஒரு சோதனை காலம் தொடர உள்ளது.
Prev Topic
Next Topic