![]() | 2018 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கல்வி |
கல்வி
2017ஆம் ஆண்டு மாணவர்கள் பல சங்கடங்களையும் சோதனைகளையும் சந்தித்து வந்திருப்பார்கள். உங்களது மன அழுத்தம் அதிகமாகவே இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது சூழல் மாறி நீங்கள் நேர்மறை பலன்களை அடையப் போகிறீர்கள். நீங்கள் உங்களது தவறுகளை உணர்ந்து, தீய பழக்கத்திற்கு ஆளாகி இருந்திருந்தால், அதில் இருந்து விடு பட்டு இப்பொழுது ஒரு நல்ல நிலையில் வாழ்வீர்கள். தீய நண்பர்களின் சகவாசத்ததில் இருந்து விடுபடுவீர்கள்.
உங்களது கல்வியில் அதிகம் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். மேலும் நீங்கள் அதிகம் மதிப்பென்களும் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய படியே உங்களுக்கு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்களது வளர்ச்சியை கண்டு உங்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி கொள்வார்கள். மேலும் அவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
உங்களது உயர் கல்வியில் நீங்கள் தற்காலிகமாக இடைவெளி விட்டிருந்தாள், அதை மீண்டு தொடருவீ ர்கள். இது உங்களது கல்வியை தொடருவதற்கு ஒரு ஏற்ற காலகட்டமாக இருக்கும். மேலும் முதுநிலை பட்டம் மற்றும் Ph.D முடிப்பதற்கு ஏற்ற காலமாகும். உங்களது ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டம் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic