![]() | 2018 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
2017ல் முக்கிய கிரகங்களான குரு, சனி, ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சாரம் செய்யாததால் உங்களது நிதி நிலையில் சில பிரச்சனைகள் நிலவி வந்திருக்கும். உங்களது கடன்களை கண்டு நீங்கள் பயந்திருக்க கூடும். எனினும் இந்த 2018ஆம் ஆண்டு உங்களுக்கு பல வழிகளில் இருந்து பண உதவியும் வருமானமும் கிடைக்கும்.
உங்களது கடன்களை அடைப்பதற்கு இது ஒரு ஏற்ற காலகட்டமாக இருக்கும். மேலும் உங்களது கடன் வட்டியும் குறையும். புது வேலை, ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். மேலும் தேவை இல்லாத செலவுகளும் குறையும். இதனால் நீங்கள் விரைந்து கடனை அடைப்பீர்கள். மேலும் உங்களது கடன் மதிப்பீடும் உயர்ந்து உங்களுக்கு எளிதில் வங்கியில் கடனும் கிடைக்கும். இது தொழில் புரிவோர்களுக்கு சாதகமான ஒரு நிலையை தரும்.
நிதி மற்றும் வங்கி தொடர்பான இலாக்கள் உங்களுக்கு லாபகரமாக இருக்கும். வெளி நாட்டில் வாழும் உங்களது உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த வருடம் குரு மற்றும் சனியின் பலத்தால் நீங்கள் உங்களது மோசமான நிதி நிலையில் இருந்து வெளி வந்து பல சிக்கல்களை தீர்ப்பீர்கள்.
Prev Topic
Next Topic