2018 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

ஜனவரி 01, 2018 முதல் ஏப்ரல் 17, 2018 நல்ல சூழல் ஆரம்பம் (80 / 100)


இந்த கால கட்டம் உங்களுக்கு நல்ல முன்னேட்ட்ரங்களை தர உள்ளது. உங்களது உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள். மேலும் உங்களுக்கு தக்க மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். நீங்கள் அறுவை சிகிச்சை ஏதேனும் கடந்த காலத்தில் செய்துள்ளீர்கள் என்றால் விரைவில் குனமடைவதை காணலாம். மேலும் நீங்கள் மன அழுத்தம் மற்றும் மன குழப்பத்தில் இருக்குறீர்கள் என்றால், அதில் இருந்து வெளி வருவீர்கள். மன அமைதியும் உங்களுக்கு கிடைக்கும். உங்களது உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதற்கு இது ஏற்ற காலமாகும்.
உங்களது குடும்பம் மற்றும் சொந்த வாழ்கையில் நல்ல மாற்றங்களை காணுவீர்கள். நீங்கள் உங்களது மனைவி / கணவனிடம் இருந்து பிரிந்து இருக்குறீர்கள் என்றால், அவரிடத்தில் பொறுமையாக பேசி மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ இந்த பெயர்ச்சி காலம் சாதகமாக உள்ளது. சிலருக்கு புதிதாக திருமணம் ஆவதற்கும் வாய்ப்புள்ளது. எனினும் ராகு உங்களது ஜென்ம ராசியில் இருப்பதால் நீங்கள் யாரையும் காதலித்து திருமணம் செய்ய எண்ணுவது சற்று கடினமே. அதனால் நீங்கள் உங்காளது வீட்டில் பார்க்கும் வரனை திருமணம் செய்வதே உத்தமம்.
உங்களது மனைவி / கணவன் வீட்டாரிடம் ஏதேனும் பிரச்சனை இருந்திருந்தால் அது இப்பொழுது சுமூகமாக தீர்ந்து நீங்கள் அவர்களிடத்தில் நல்ல உறவில் இருப்பீர்கள். அவர்கள் உங்களை நன்கு புரிந்து கொள்வார்கள். மேலும் குடும்பத்தில் எந்த ஒரு அரசியலும் இருக்காது. சுப காரியங்கள் செய்வதற்கு இது ஏற்ற காலமாகும். மேலும் இந்த காலகட்டத்தில் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியமும் உள்ளது.


உங்களது தற்போதைய உத்தியோகத்தில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், நீங்கள் புதிதாக வேறு இடத்தில் வேலை தேடுவதற்கு இது சாதகமான காலமாகும். உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதிக சம்பளத்தை எதிர் பார்ப்பதை விட நல்ல செல்வாக்கு நிறைந்த கம்பெனியில் வேலை கிடைக்கும் என்றால் அதனை ஏற்று கொள்வது உத்தமம். அடுத்த 2 ஆண்டுகளுக்கு உங்களுக்கு நேரம் பிரமாதமாக உள்ளதால் இப்பொழுது எடுக்கும் முயற்சி உங்களது வாழ்க்கையில் நீண்ட கால பலன்களை தரும். நீங்கள் மேலும் உத்தியோகத்தில் முன்னேறுவீர்கள்.
தொழிலதிபர்களுக்கு இது ஒரு சிறந்த காலமாகும். இந்த இரண்டாம் பாகத்தின் காலத்தில் நீங்கள் முதலீடு செய்து புதிதாக தொழில் தொடங்கலாம். உங்களுக்கு பல நல்ல ப்ரோஜெக்டுகளும் கிடைக்கும். இதனால் உங்களது பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய அனைத்து நிதி பிரச்சனைகளிலும் இருந்து நீங்கள் வெளி வருவீர்கள். மேலும் உங்களது வேற்று வருமானத்தையும் அதிகரிப்பதற்கு இந்த பெயர்ச்சி காலம் சாதகமாக உள்ளது.
ரியல் எஸ்டேட் முதலீடு நீண்ட கால பலன்களை தரும். எனினும், நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது உத்தமம். நீண்ட கால முதலீட்டாளர்கள் புதிதாக பங்குகள் வாங்கி அதனை ஒன்று அல்லது இரண்டு வருட காலம் வரை வைத்து வர்த்தகம் செய்யலாம். எனினும் ஊக வர்த்தகம் உங்களுக்கு சாதகமாக இல்லை.



Prev Topic

Next Topic