![]() | 2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் |
திரைப்படம், காலை, அரசியல்
2017ல் திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிக பிரச்சனைகளையும் அதிர்ஷ்டம் இல்லாத சூழலையும் சந்தித்து வந்திருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் திரைப்படங்கள் சில காரணங்களால் தடை பட்டிருக்கும். இதனால் நீங்கள் சில நட்டத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும். மேலும் உங்களது புகழையும் பேரையும் இழந்திருப்பீர்கள். நீங்கள் மொத்தத்தில் சோர்ந்து போயிருப்பீர்கள்.
இந்த வருடம் பல நல்ல வாய்ப்புகளை காண்பீர்கள். நீங்கள் இப்பொழுது ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள். மக்கள் உங்களை அதிகம் கவனிப்பார்கள். உங்களது நிதி நிலையம் நல்லபடியாக உயரும். அடுத்த 2 வருடங்களுக்கு நீங்கள் அதிக வளர்ச்சியை காணப்பீர்கள். மேலும் திரை துறையில் நீங்கள் அழுத்தமாக கால் ஊன்ற இது தக்க சமயமாகும். நீங்கள் முக்யஸ்தவர் அந்தஸ்தை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு இது ஒரு நல்ல காலமாகவே உள்ளது. நீங்கள் எதிர் பார்த்த வெற்றியை வரும் தேர்தலில் எதிர்ப் பார்க்கலாம். அடுத்த 2 ஆண்டுகள் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது.
Prev Topic
Next Topic