![]() | 2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2017ல் நீங்கள் உங்களது வாழ்க்கையில், முக்கியமாக குடும்பத்தில் அதிக பிரச்சனைககளையும் மன சங்கடங்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கை பெரிதும் பாதிக்க பட்டிருக்கும். உளவியல் ரீதியாக நீந்தல் 2017ல் பல சங்கடங்களை சந்தித்து இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த 2018ஆம் ஆண்டு மிக சிறப்பான ஒன்றாக இருக்கும். குரு 4 மற்றும் 5ஆம் வீட்டிலும் சனி 6ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது உங்களுக்கு பல பெரிய அதிர்ச்ட்டங்களை தரப் போகிறது.
இந்த வருடத்தின் தொடக்கம் முதலே நீங்கள் உங்களது வாழ்க்கையில் பல நேர்மறை மாற்றங்களை காண்பீர்கள். முக்கியமாக நீங்கள் உங்களது சக்திகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களது மன அழுத்தம் மற்றும் பதட்டம் இனி வெகுவாக குறையும். எனினும் ராகு உங்களுக்கு நல்ல நிலையில் இல்லாததால் சில பாதகமான சூழலை தரக் கூடும். அதனால் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் உங்களது வேலை அல்லது தொழிலில் ஒரு நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். இதனால், இதுவரை நிலவி வந்த நிதி பிரச்னைகளிலில் இருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். புன்னகையோடு வெற்றி பாதையை நோக்கி செல்வீர்கள்.
Prev Topic
Next Topic