2018 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

ஆகஸ்ட் 06, 2018 முதல் டிசம்பர் 31, 2018 பொன்னான கால கட்டம் (85 / 100)


இந்த சனி பகவான் உங்களது ராசிக்கு 6-ம் இடத்தில வக்கிர நிவர்த்தி செப்டம்பர் 6-ம் தேதி முன்னோக்கி நகர்கிறார். குருவும் வக்கிர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்கு வரும் அக்டோபர் 11, 2018 அன்று பெயர்ச்சி ஆகிறார்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்களது வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியையும் வெற்றியையும் காண்பீர்கள். இது நாள் வரை இருந்த பின்னடைவுகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். உங்களது குடும்பத்தினர்களது உடல் நலமும் முன்னேற்றம் காணும். இதனால மருத்துவ செலவுகள் எதுவும் உங்களது வீட்டில் இருக்காது. உங்களது வாழ்க்கையில் அனைத்து விசயங்களும் நேர்மறையாகவே இருக்கும். இது உங்களை அதிகம் மகிழ்விக்கும்.
உங்களது மனைவி / கணவன் உங்களது வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். திருமணம் ஆனவர்கள் அன்யுநியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். மேலும் நீண்ட காலம் குழந்தைக்காக காத்திருந்த தம்பதியினருக்கு அதற்க்கான பாக்கியம் கிடைக்கும். IVF அல்லது IUI சிகிச்சை எடுத்து கொள்பவர்களுக்கு இந்த முயற்சி வெற்றிகரமாக அமையும்.


திருமணம் ஆகாதவர்களுக்கு உங்களது மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் உங்களது விருப்பத்தை கூறுவீர்கள். குறிப்பாக நவம்பர் அல்லது டிசம்பர் 2018ல் உங்களது காதல் வெற்றி பெறும். உங்களுக்கு திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் இருந்தால் அவர்களுக்கு வரன் பார்க்க இது ஏற்ற காலகட்டமாகும். உங்களது குடும்பத்திற்கு நல்ல பெரும் புகழும் சமுதாயத்தில் கிடைக்கும்.
உங்களது உத்தியோகத்தில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேலும் உங்களது உத்தியோகத்தில் அடுத்த படி முன்னேறுவீர்கள். புது வேலை உங்களுக்கு நல்ல பல பலன்களை கொண்டு வரும். நீங்கள் தற்காலிகமாக வேலை பார்க்கின்றீர்கள் என்றால் அது நிரந்தரமாகும்.
தொழிலதிபர்களுக்கு இந்த மூன்றாம் பாக காலகட்டம் ஒரு பொற்காலமாக இருக்கும். உங்களது வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மேலும் உங்களது ஒப்பந்தம் நீட்டிக்க படும். இதனால் நீங்கள் அதிக லாபம் காண்பீர்கள். மேலும் உங்களது பண வர்த்து அதிகரிக்கும். நீங்கள் நல்ல தரமான பொருட்களை உற்பத்தி செய்து தருவீர்கள். சுய தொழில் செய்பவர்கள் மற்றும் கமிஷன் ஏஜெண்டுகள் அவர்களது துறையில் நல்ல முன்னேற்றத்தையும் லாபத்தையும் காண்பார்கள்.


உங்களது முன்னேற்றத்தையும் நிதி வளர்ச்சியையும் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். மேலும் உங்களது கடன் தொல்லைகளில் இருந்து நீங்கள் விடு படுவீர்கள். மேலும் உங்களது சேமிப்பு அதிகரிக்கும். நீங்கள் நவம்பர் 2018ல் புது வீடு வாங்க முயற்ச்சிக்கலாம். அது உங்களது வாழ்வாதாரத்தையும் சௌகரியத்தையும் அதிகரிக்கும். பங்கு சந்தை முதலீடு உங்களுக்கு இந்த காலகட்டத்தில் லாபகரமாக இருக்கும். உங்களது அதிர்ஷ்டத்தை காண நீங்கள் நவம்பர் 2018ற்கு மேல் அதிர்ஷ்ட சீட்டு போன்ற வற்றை முயற்சிக்கலாம்.


Prev Topic

Next Topic