2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


நீங்கள் 2017ஆம் வருடம் பங்கு சந்தையில் சில நட்டங்களை அடைந்துருப்பீர்கள். இது உங்களது நிதி நிலையை பெரிய அளவில் பாத்திரத்திற்கும். அது மட்டும் அல்லாது அந்த நாட்டங்கள் உங்களது குடும்ப வாழக்கையையும் பெரிய அளவில் பாதித்திருந்திருக்கும். இதனால் நீங்கள் உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் சில அவமானங்களை அடைந்திருப்பீர்கள். யாரும் உங்களது பண பிரச்சனைகளுக்கு உதவி செய்ய முன் வைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இப்பொழுது குரு மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் நல்ல நிலையில் உள்ளனர். ஏதேனும் பங்குகள் விற்காமல் வைத்திருந்தால் அதை அப்படியே வைத்திருங்கள், ஏனெனில் அதன் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது. இதனால் உங்களுக்கு அதிக அளவில் லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வருடம் நீங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். எனினும் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.


வரும் செப்டம்பர் 2018 வரை உங்களுக்கு நாள் வர்த்தகம் மற்றும் ஊக வர்த்தகம் அவ்வளவாக சாதகமான நிலையில் இல்லை. அதனால் நீங்கள் சற்று யோசித்தே செயல் பட வேண்டியுள்ளது. எனினும் அத்தனை நாட்கள் உங்களால் காத்திருக்க முடியாதெனில் நீங்கள் உங்களது ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்று பின் அதன் படி செயல் படுவது உத்தமம்.
மேலும் உங்களிடம் போதுமான அளவு பணம் இருந்தால் நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். நீங்கள் வாங்கும் நிலம் மற்றும் வீடு அடுத்த சில வருடங்களுக்குள் பல மடங்கு உயர்வை பெரும். இது உங்களுக்கு ஒரு லாபம் நிறைந்த முதலீடாக இருக்கும்.




Prev Topic

Next Topic