2018 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

கல்வி


தற்போது குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் படிப்பில் நீங்கள் அதிக தடைகளை சந்திக்க நேரலாம். செப்டம்பர் 2018 வரை சாதகமற்ற சூழல் நிகழலாம். உங்களது குடும்ப சூழல் உங்களுக்கு படிப்பதற்கு உறுதுணையாக இருக்காது. நீங்கள் உங்களது படிப்பில் ஆர்வத்தை இழப்பீர்கள். மேலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் திணறுவீர்கள்.
நீங்கள் நல்ல மதிப்பென்கள் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் பெரிதாக இருக்காது எனினும் கடின உழைப்பால் மட்டுமே நீங்கள் நல்ல மதிப்பென்கள் பெற முடியும். உங்களது நண்பர்களிடத்தில் தேவை அற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அது உங்களது நட்பை காக்க உதவும். மேலும் நீங்கள் விளையாட்டில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால் வெற்றி பெறுவது சற்று கடினமே.



Prev Topic

Next Topic