2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


குரு உங்களது 10ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களது குடும்பத்தில் நிலவி வந்த நல்ல சூழலை பாதிக்க கூடும். மேலும் ஏழரை சனி நடப்பதால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடைகிறார். இதனால் நீங்கள் அதிகம் பதற்றம் அடைவீர்கள். உங்களது வாழ்க்கை துணைவர் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு சில கருது வேறுபாடு ஏற்படலாம். மேலும் ராகு 7ஆம் வீடான களத்ர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த வருடம் முழுவதும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் நீங்கள் வேலை நிமித்தமாக வேறு இடத்திற்கு செல்ல வேண்டியதிருக்கும். இது உங்களது குடும்பத்தினரை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்க செய்யும். நீங்கள் பல நாள் தூக்கம் இல்லாத இரவுகளை கழிப்பீர்கள். எனினும் அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். நீங்கள் அக்டோபர் 2018ற்கு மேல், குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின் சுப காரியம் நிகழ்த்தலாம்.




Prev Topic

Next Topic