2018 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

நிதி / பணம்


இந்த 2018ல் நீங்கள் பெரிதாக எந்த ஒரு முன்னேற்றத்தையும் உங்கள் நிதி நிலையில் காண முடியாது. உங்களுடைய செலவுகள் அதிகரிக்கும். அது உங்களது சேமிப்பை வெகுவாக குறைக்கும். நீங்கள் உங்களது செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்வது நல்லது. மேலும் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு கடன் வாங்க ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். ஏனென்றால் அந்த கடனுக்கு நீங்கள் பொறுப்ப்பாக வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம்.
மேலும் தேவைக்கு அதிகமாக கிரெடிட் கார்டு வைத்திருந்தாள் அதனை அடைத்து விடுங்கள். அது உங்களை அதிகம் செலவு செய்ய தூண்டலாம் . பிரயாணம் செல்வதில்,ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற வற்றில் உங்களது செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் வீடு வாடகைக்கு விட்டிருந்தாள் அதனால் மார்ச் முதல் செப்டம்பர் 2018 செலவுகள் அதிகரிக்கலாம். இல்லை என்றால் அது வாடகைக்கு விட முடியாமல் காலியாக இருக்கலாம். எனினும் நீங்கள் பணம் மற்றும் நிதி ரீதியாக எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் சிந்தித்து செயல் படுவது நல்லது. அக்டோபர் 2018ற்கு மேல் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.




Prev Topic

Next Topic