![]() | 2018 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | முதல் பாகம் |
ஜனவரி 1, 2018 முதல் மார்ச் 09, 2018 வரை - கலவையான பலன்கள் (5௦ / 100)
இந்த காலகட்டத்தில் எந்த ஒரு நட்டமும் இழப்பும் இருக்காது. இருந்தாலும் உங்களது வளர்ச்சி குறைவாக இருக்கும். நீங்கள் விரைவாக முன்னேறுவது கடினமே. பொறுத்திருப்பது அவசியம். எனினும் இது உங்களது மனதளவில் பாதிக்க கூடும். மேலும் நினைத்த படி முன்னேற்றம் வராததால் உங்களுக்கு தேவையற்ற பயமும் பதற்றமும் தோன்றும். அதனை தவிர்க்க நீங்கள் யோகாசனம் மற்றும் த்யானம் செய்வது அவசியம். அது நீங்கள் பெருமையாகவும் அமைதியாகவும் இருக்க உதவும். உங்களது குடும்பத்தினர்களோடு தேவையற்ற வாக்குவாதம் மற்றும் சண்டை ஏற்படல்லாம். மேலும் திருமணம் ஆனவர்கள் ஒற்றுமை இன்றி இருப்பார்கள். காதலர்களுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலை சுமையும் அழுத்தமும் ஏற்படும். நீங்கள் உங்களது ப்ரோஜெக்ட்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதற்காக அதிக நேரம் உழைக்க வேண்டியதிருக்கும். எனினும் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வை எதிர் பார்ப்பதற்கு இது ஏற்ற காலகட்டம் இல்லை. மேலும் இந்த காலகட்டத்தில் வேறு வேலை தேடுவதை அல்லது இட மாற்றம் போன்ற முயற்ச்சியை தவிர்க்கவும். உங்களது அலுவலகத்தில் தேவையற்ற அரசியல் மற்றும் பிரச்சனைகள் தோன்றினாலும் நீங்கள் உங்களது வேளையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் குருவின் பலத்தால் நீங்கள் அத்தகைய பிரச்சனைகளை நிச்சயம் சமாளிக்க முடியும். தொழிலதிபர்கள் திட்டமிட்டு செலவுகளை அல்லது முதலீடு செய்ய வேண்டும். மேலும் இந்த அக்காலகட்டத்தில் தொழில் விரிவாக்கத்திற்கான முயற்ச்சியை தவிர்ப்பது நல்லது.
இந்த இரண்டாம் பாக காலகட்டத்தில் உங்களது செலவுகள் அதிகரிக்கும். உங்களது பிற வழி வருமானங்கள் குறையலாம். தேவையற்ற பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படலாம். மேலும் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பங்கு சந்தை முதலீட்டை தவிர்ப்பது நல்லது. அது உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம். மேலும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் பணம் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பெரிதாக எந்த ஒரு வளர்ச்சியையும் எதிர் பார்க்காமல் இருக்கும் நிலையிலேயே நல்லபடியாக தொடருவதில் கவனம் செலுத்தினால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
Prev Topic
Next Topic