2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் டிசம்பர் 31, 2018 வரை - குடும்பத்தில் மகிழ்ச்சி (65 / 100)


குரு பகவான் உங்களது ராசியின் 11ஆம் வீட்டிற்கு வரும் அக்டோபர் 11, 2018 அன்று இடம் மாறுகிறார். இந்த காலகட்டத்தில் ராகு மற்றும் குரு பகவானின் பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை தர உள்ளது. இது ஏழரை சனியால் ஏற்பட உள்ள பாதிப்புகளை பெரிய அளவிற்கு குறைக்கும். உங்கள் மனம் மற்றும் உடல் நேர்மறை சக்தியால் நிறைந்திருக்கும். உங்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை பேசி சரி செய்ய இது ஏற்ற காலகட்டமாகும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். மேலும் வீட்டில் சுப காரியம் செய்ய இது ஏற்ற காலகட்டமாகும்.
நீங்கள் புதிதாக அல்லது வேறு வேலை மாற்றத்திற்காக முயற்சி செய்கின்றீர்கள் என்றால் அதற்க்கான தக்க சமயம் இதுவாகும். உங்களுக்கு நல்ல வேலை வைப்பு கிடக்க இது ஏற்ற காலகட்டம். உங்களது வேலை சுமை குறையும். மேலும் உங்கள் முதலாளி அல்லது மேலாளரிடம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை பற்றி பேச இது ஏற்ற காலகட்டமாகும். தொழிலதிபர்கள் வியக்க தக்க விதத்தில் வளர்ச்சி பெறுவீர்கள். உங்களது பண வரத்தும் பல் வேறு விதத்தில் அதிகரிக்கும்.


விசா குறித்த பிரச்சனைகள் சரியாகும். பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். உங்களுக்கு எதிர் பார்த்த வங்கி கடன் ஒப்புதல் பெரும். மேலும் கடன் சுமையை குறைக்க மறு நிதியாக்கம் செய்வது பலனளிக்கும். அது கடனின் வட்டி விகிதத்தை குறைக்க உதவும். மேலும் நீங்கள் வீடு வாங்க முயற்ச்சிக்க இது ஏற்ற காலகட்டமாகும். ரியல் எஸ்டேட் முதலீடு உட்ன்களுக்கு பலனளிக்கும். பங்கு சந்தை முதலீடு லாபம் தரும்.



Prev Topic

Next Topic