![]() | 2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | உடல் நலம் / ஆரோக்கியம் |
உடல் நலம் / ஆரோக்கியம்
குரு உங்கள் ராசியின் 10ஆம் வீட்டிலும் சனி 12ஆம் வீட்டிலும் மற்றும் செவ்வாய் கேது 6ஆம் வீட்டிலும் இந்த 2018ஆம் வருடம் சஞ்சரிப்பதால் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீங்கள் உங்களது உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். மேலும் மன அழுத்தமும் மற்றும் தேவையற்ற பயமும் வரக் கூடும். இது உங்களை நிம்மதியாக இரவில் தூங்க விடாமல் செய்யலாம். எனினும் நல்ல உறக்கம் வேண்டுமென்றால் நீங்கள் மூச்சு பயர்ச்சி, உடற்ப் பயிற்சி, யோகாசனம் அல்லது த்யானம் செய்வது நல்லது. மது போன்ற தீய பழக்கங்களை தவிர்ப்பது நல்லது. அது உங்களது உடல் நிலையை நீண்ட கால அடிப்படையில் அதிகம் பாதிக்க கூடும்.
ராகு உங்களது 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களது மன நிலையை பெரிதும் பாதிக்க கூடும். உங்களுக்கு மன குழப்பம் மற்றும் அழுத்தம் வரலாம். எனினும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்தால் மட்டுமே நீங்கள் அத்தகைய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். போதுமான பயிற்சி இல்லாததால் நீங்கள் விளையாட்டில் வெற்றி பெறுவது சந்தேகமே. தினமும் ஹனுமன் சாலிசா மற்றும் ஆதித்ய ஹ்ரிதயம் கேட்டு வருவது உடல் நல கோளாறுகளில் இருந்து உங்களை விடுவிக்க உதவும். மேலும் உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் தேவையான மருத்துவ காப்பீடு எடுத்து கொள்வது நல்லது. இது செலவுகளை குறைக்க உதவும்.
Prev Topic
Next Topic