![]() | 2018 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | இரண்டாம் பாகம் |
மார்ச் 09, 2018 முதல் ஜூலை 10, 2018 வரை - மிதமான வளர்ச்சி (65 / 100)
உங்களுக்கு இருந்த பின்னடைவுகள் தற்போது ஒரு முடிவிற்கு வரும். நீங்கள் உங்களது வாழ்க்கையில் வளர்ச்சியை காண்பீர்கள். குரு மற்றும் சனியின் வக்கிர கால கட்டம் உங்களுக்கு நல்ல வளர்ச்சியை தர உள்ளது. உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் வர உள்ளன. நீங்கள் மேலும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நேரமும் இது.
நீங்கள் உங்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏற்று கொள்வீர்கள். நல்ல உறக்கமும் உங்களுக்கு இரவில் வரும். மேலும் உங்களது மனைவி / கணவன் உங்களை புரிந்து கொண்டு உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவி உறவு நல்ல நிலையில் இருக்கும். மேலும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். புதிதாக திருமணம் ஆனவர்கள் நல்ல புரிதலோடு சுமூகமான வாழ்க்கையை வாழ்வார்கள். காதல் விசயங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது.
அலுவலகத்தில் உங்களது வேலை சுமை குறையும். இதனால் பதற்றமும் குறையும். மேலும் மறைமுக எதிரிகளும் குறைவார்கள். அவர்களால் உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. உங்களது அலுவலக பணிகளை நீங்கள் எளிதாக சமாளிப்ப்பீர்கள். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை மாற்றத்திற்கு முயற்ச்சிப்பது சரியான முடிவாக இருக்காது. நீங்கள் தற்போதைய வேலையில் தொடர்ந்து இருப்பது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வழிவகுக்கும்.
தொழிலதிபர்கள் நேர்மறையான பலன்களை அடைவார்கள். உங்களுக்கு பல புது ப்ரோஜெக்ட்டுகளும் கிடைக்கும். உங்களது பண வரத்து அதிகரிக்கும். மேலும் நீங்கள் எதிர் பார்த்த வங்கி கடன் எளிதாக கிடைக்கும். எனினும் புது முதலீடு செய்வது மற்றும் தொழிலை விரிவு படுத்துவது போன்ற முயற்சிகளை தற்போது செய்ய வேண்டாம். அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் உங்களது ஜென்ம ஜாதகத்தை பார்த்து அதன் படி செயல் படுவது உத்தமம்.
இந்த குரு பெயர்ச்சியின் மூன்றாம் பாகம் உங்களுக்கு பயணம் மற்றும் வெளி நட்டு பயணம் அல்லது குடியேற்றம் போன்ற முயற்சிக்கு சாதகமாக உள்ளது. உங்களுக்கு விசா சம்பந்தமான விசயங்களில் சிக்கல்கள் இருந்திருந்தால் அது தற்போது சரியாகி விடும். மேலும் உங்களது அலுவலகத்தில் உங்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும். இதனால் உங்களது வருமானம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். மேலும் நீங்கள் உங்களது கடன்களை விரைவில் அடைப்பீர்கள். உங்களது நண்பர்களும் உங்களுக்கு துணையாக இருந்து உங்களது பண தேவைகளுக்கு உதவுவார்கள்.
பங்கு சந்தை முதலீட்டை தவிர்ப்பது நல்லது. நீங்கள் நீண்ட கால முதலீடு செய்தால் அது ஓரவிர்க்காயினும் உங்களுக்கு லாபம் ஈட்டி கொடுக்கும். சொத்துக்கள் விற்பதற்கு இது ஏற்ற காலகட்டமாகும். எனினும் அதிர்ஷ்ட சீட்டு போன்ற வற்றில் பணம் செலவழிப்பதை தவிர்க்கவும். உங்களது ஜென்ம ஜாதகம் சாதகமாக இல்லை என்றால் அது உங்களுக்கு எதிர் பார்த்த அதிர்ஷ்டத்தை கொடுக்காது.
Prev Topic
Next Topic