2018 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடு ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடு


செவ்வாய் மற்றும் கேது எதிர் பாராத மாற்றத்தை பங்கு சந்தையில் ஏற்படுத்த கூடும். உங்கள் ஜென்ம ஜாதகத்தை பொறுத்தே இந்த வருடம் நீங்கள் பங்கு சந்தை முதலீடு செய்ய வேண்டும்.
நீண்ட காலம் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திட்டமிட்டு செயல் படுவது நல்லது. எனினும் குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நட்டம் வர வாய்ப்புள்ளது. அதனால் அதிகம் சிந்தித்து முதலீடு செய்வது நல்லது. நீங்கள் உங்களது பணத்தை சேமிப்பு அல்லது பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.


நீங்கள் ஏற்கனவே ரியல் எஸ்டேட் சொத்துக்கள் வாங்கி இருந்தால் பரவாயில்லை. அதனால் உங்களுக்கு பெரிதாக நட்டம் அல்லது பிரச்சனைகள் வராது. எனினும் இனி வரும் காலத்தில், குறிப்பாக ஏழரை சனி ஆரம்ப காலகட்டத்தில் எந்த ஒரு முதலீடும் ரியல் எஸ்டேட்டியில் செய்வது நல்லது இல்லை. அது ஏழரை சனியின் நீண்ட காலத்தில் உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். மேலும் அதிர்ஷ்ட சீட்டு அல்லது சூது போன்ற வற்றில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பணம் சம்பாதிக்க அல்லது லாபம் காண நீங்கள் அத்தகைய செயலுக்கு அடிமை ஆகக்கூடும். அதனால் கவனத்தோடு இருப்பது நல்லது.



Prev Topic

Next Topic