2018 புத்தாண்டு வேலை மற்றும் உத்யோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

வேலை மற்றும் உத்யோகம்


இந்த 2018ஆம் வருட தொடக்கத்தில் பல தடைகளையும் பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரலாம். இது உங்களது அலுவலகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். அது உங்களை மனதளவில் பெரிதாக பாதிக்க கூடும். எனினும் தற்போதைய உங்களது நிலையில் நீங்கள் தொடர்ந்து பனி புரிவீர்கள். இந்த வருடம் உங்களுக்கு வேலை / உத்யோகம் நிலையாக இருக்கும்.
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்கள் வேலை சுமையையும் பதற்றமும் அதிகரிக்கலாம். நீங்கள் அடுத்த படி முன்னேறுவதற்கு அதிக கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். கடந்த சில வருடங்களை விட தற்போது நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். இது உங்களது வாழ்க்கையையும் பாதிக்க கூடும். மேலும் வரும் 2018 உங்களுக்கு கிடைக்கும் வெகுமதி உங்களை மகிழ்விக்காது.


நீங்கள் உடன் வேலை பார்ப்பவர்களிடம் நல்ல சூழலில் இருக்க உங்களது திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் நீங்க வெளி நாட்டரிக்கு செல்ல முயற்சித்தால் உங்களுக்கு விசா கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
செப்டம்பர் 2018 வரை எந்த ஒரு முடிவும் எடுப்பதற்கு முன் நன்கு யோசித்து செயல் படுவது உத்தமம். முக்கியமாக வேறு துறை அல்லது இடமாற்றம் குறித்து முடிவெடுப்பதற்கு முன் சிந்தித்து செயல் படுவது தேவை அற்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும்.




Prev Topic

Next Topic