2018 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


குரு பகவான் உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த 2018ஆம் ஆண்டு உங்களது குடும்ப சூழல் மிகவும் நல்ல நிலையிலும் ஆறுதலாகவும் இருக்கும். நீங்கள் விவாகரத்து ஆனவராக இருந்தால், புது துணை அல்லது உறவை நீங்கள் எதிர்ப் பார்க்கலாம்.
உங்களது உறவினர்கள் உங்களை கடந்த காலத்தில் மதித்திருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது உங்களை தேடி வருவார்கள். உங்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள். மேலும் உங்களது குழந்தைகள் உங்களது வார்த்தைகளை மதிப்பார்கள். பல நல்ல சூழலை நீங்கள் உங்களது குடும்பத்தில் எதிர்ப் பார்க்கலாம்.


திருமணம் ஆகாத மகன் அல்லது மகள் இருந்தால், அவர்களுக்கு இந்த பெயர்ச்சி காலத்தில் நல்ல வரன் அமைய பெரும். உங்களது இல்லத்தில் திருமணம், புது மனை புகுதல் போன்ற சுப காரியங்களை நீங்கள் மகிழ்ச்சியோடு செய்வீர்கள்.
சனி பகவான் உங்களது ராசியை பார்வை இடுவதால்அனைத்தும் சரியாக நடந்தாலும் உங்களுக்கு தேவை இல்லாத பயம் எழும். எனினும் தியானம் மற்றும் கடவுள் வழிபாடு செய்வதால் உங்களது மன தைரியம் அதிகரிக்கும். நீங்கள் தேவை இல்லாத கொழப்பதிலும் மன அழுத்தத்திலும் இருந்து வெளி வருவீர்கள். இந்த 2018 வருடம் முழுவதும் உங்களது குடும்ப வாழ்க்கையில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.



Prev Topic

Next Topic