![]() | 2018 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
குரு இந்த பெயர்ச்சி காலத்தில் உங்களது ஜென்ம ராசியில் லாப ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால், உங்களது நிதி நிலையில் நீங்கள் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். அணைத்து கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். மேலும் உங்களது சேமிப்பும் அதிகரிக்கும். உங்களது கடன் மதிப்பீடு நல்ல நிலையில் இருப்பதால் வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுக்க முன்வருவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
உங்களது செலுவுகள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். வங்கி துறை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களது குடும்பத்தினருக்கு தங்க நகைகள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். நிம்மதியான தூக்கமும் மன அமைதியும் உங்களுக்கு இந்த பெயர்ச்சி காலத்தில் கிடைக்கும். கடன் அடைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
எனினும், சனி 7ஆம் வீட்டிலும், ராகு 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பார்கள். இதனால் உங்களது மருத்துவ செலவுகள் சற்று அதிகரிக்க கூடும். மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்வதால் அதிக செலவுகளில் இருந்து விடுபடலாம். எனினும் அக்டோபர் 2018ற்கு மேல் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic