2018 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் டிசம்பர் 31, 2018 உடல் நலம் மற்றும் சொந்த பிரச்சனைகள் (45 / 100)


குரு அக்டோபர் 11, 2018 அன்று விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் உங்களுக்கு 7-ம் இடத்தில சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் கண்டக சனியின் தாக்கத்தை நீங்கள் அதிகம் உணரலாம். உங்களது மனம் மற்றும் உடல் நலம் அதிகம் பாதிக்கப்படலாம். உங்களது மனைவி / கணவன் மற்றும் பெற்றோர்கள் உடல் நலம் பாதிக்க படலாம். இந்த காலகட்டத்தில் அதிக பிரச்சனைகள் வரலாம். பிரச்சனைகளுக்கான மூல காரணத்தை கண்டரிவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். புதிதாக திருமணம் ஆனவர்கள் அதிக அளவில் சவால்களை சந்திக்க நேரலாம். மேலும் குழந்தை பேருக்கான முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. நீங்கள் யாரையேனும் விரும்புகுரீர்கள் என்றால் அவருடன் சில பிரச்சனைகள் அல்லது சண்டை ஏற்படலாம். காதல் குறையும். வீட்டில் சுப காரியம் ஏதேனும் திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதனை சிறிது காலத்திற்கு தள்ளி போடுவது நல்லது.
அலுவலகத்தில் நிகழும் அரசியலால், உங்களது வேலை பாதிக்க படலாம். உங்களால் உங்களது உற்பத்தியை அதிகரிக்க முடியாமல் தினருவீர்கள். அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.


வெளி நாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு விசா குறித்த பிரச்சனைகள் வரலாம். இதனால் நீங்கள் தாய் நாடு திரும்பும் சூழலும் ஏற்படலாம். தொழிலதிபர்கள் எதிர் பாராத பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். இதனால் உங்களது நிதி நிலையம் பாதிக்க படலாம். உங்களது செலவுகள் அதிகரிப்பதால் சேமிப்பு குறையும். மேலும் நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழலும் எழலாம். இந்த நான்காம் பாக காலகட்டத்தில் பங்கு சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic