2018 புத்தாண்டு உடல் நலம் / ஆரோக்கியம் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

உடல் நலம் / ஆரோக்கியம்


5ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நலம் பொதுவாக இயல்பான நிலையில் இருக்கும். அதிக சக்தியோடு காணப் படுவீர்கள். எனினும் சனி 7ஆம் வீட்டிற்கு செல்லும் காலகட்டத்தில் நீங்கள் சில சிறிய உடல் நல பிரச்சனையால் அவதிப்படக் கூடும். முதுகு வலி, வயிற்று வலி, பித்தப்பை மற்றும் கண்களில் சில உபாதைகள் வரக் கூடும். எனினும் தக்க சிகிச்சை மற்றும் மருந்து கிடைத்து நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். எந்த ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலும் குருவின் அருளால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.
நீங்கள் உங்களது பெற்றோர்கள் மற்றும் மனைவி/ கணவனது ஆரோக்கியத்தில் சிறுது கவனம் செலுத்த வேண்டும். தினமும் லலிதா சஹஸ்ர நாமம் கேட்டு வருவதால் உடல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம்.


இந்த வருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவதால் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. சிறு அறுவை சிகச்சைகளும் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.


Prev Topic

Next Topic