2018 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

காதல்


குரு 5ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளதால் காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு சாதகமான காலமாகவே உள்ளது . மேலும் நீங்கள் உங்களது எதிர் கால வாழ்க்கைத் துணையோடு சண்டை போட்டு பிறந்திருந்தால், அதை சரி செய்து சமாதானம் ஆவதற்கு இந்த பெயர்ச்சி காலம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். அல்லது உங்களுக்கு புது உறவு கிடைக்கவும் இந்த குரு பெயர்ச்சி ஒரு சாதகமான சூழலை தரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் காதல் வயப்படுவீர்கள் என்றால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
எனினும் உங்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பிய படியே உங்களது பெற்றோர்களிடம் இருந்து சம்மதம் பெற்று காதல் திருமணம் செய்வதற்கு இந்த குரு பெயர்ச்சி காலம் ஒரு நல்ல சூழலை உங்களுக்கு தரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் செய்யவதற்கு இது ஏற்ற காலகட்டமாக உள்ளது. எனினும் குரு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் செப்டம்பர் 30 2018ற்குள் செய்வது நல்லது.


திருமணம் ஆனவர்கள் தங்களது வாழக்கையில் தங்களது துணையோடு ஒரு நல்ல ஒற்றுமையும் அன்னியூனியமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் அவர்களுக்கு குழந்தை பேர் பெறுவதற்கு இது ஏற்ற காலமாகவே உள்ளது. மொத்தத்தில் திருமணம் ஆனவர்களுக்கும் ஆகப்போபவர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி ஒரு பொற்காலமாகவே உள்ளது.


Prev Topic

Next Topic