2018 புத்தாண்டு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ராசி பலன்கள் Rasi Palangal - Midhuna Rasi (மிதுன ராசி)

திரைப்படம், கலை, அரசியல்


நீங்கள் ஒரு திரை நட்சத்திரமாக இருந்தால், இந்த வெளிவரவிருக்கும் உங்களது திரை படங்கள் பெரிய அளவில் வெற்றி பெரும். நீங்கள் முக்யஸ்தவர் அந்தஸ்தை பெறுவீர்கள். ஊடகங்கள் உங்கள் பின்னால் வரும். உங்களுக்கு பல வாய்ப்புகளும் கிடைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் உங்களது நிதி நிலையும் நல்லபடியாக இருக்கும். நீங்கள் வீடு மனை வாங்க இது ஏற்ற காலமாகும். உங்களது குடும்பத்தினரோடும் உறவினர்களோடும் நல்ல உறவில் இருப்பீர்கள். எனினும் நீங்கள் உங்களது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் வரும் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். உங்களுக்கு உங்களது கட்சியில் தலைமை பொறுப்பும் கிடைக்க்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பேரும் புகழும் அடைவீர்கள். மக்கள் உங்களை மதிப்பார்கள். நீங்கள் வருமான வரி மற்றும் வழக்குகளில் ஏதேனும் சிக்கியுள்ளீர்கள் என்றால் அதில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள் . இந்த குரு பெயர்ச்சி காலம் திரை நட்சத்திரங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பொற்காலமாக இருக்கும்.


எனினும் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீடிற்கு அக்டோபர் 11, 2018 அன்று பெயர்ந்த பின் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக அதிகரிக்கும் அரசியலால் நவம்பர் மற்றும் டிசம்பர் 2018 காலகட்டங்களில் நீங்கள் பல நல்ல வாய்ப்புகளை இழக்க கூடும்.



Prev Topic

Next Topic